கோவையில் 144 தடை உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க வீடியோ கால் மூலம் பிசியோதெரபி பயிற்சி!

கோவை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக கோவையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு வீடியோ கால் முறையில் பிசியோதெரபி ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக கோவையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு வீடியோ கால் முறையில் பிசியோதெரபி ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நவீன மருத்துவத்தில் தவிர்க்க முடியாத காரணியாக இயன்முறை மருத்துவம் எனப்படும் பிசியோதெரபி உள்ளது. மாதக் கணக்கில் பக்கவிளைவுள்ள வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிட்டு குணமாக்குவதைவிட பிஸியோதெரபி மருத்துவம் எந்த பக்க விளைவுகளும் இன்றி விரைவிலேயே குணமாக்கும் தன்மையுள்ளது.

இந்த மருத்துவத்தின் தேவையானது மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறப்பு குழந்தைகளுக்கும், விபத்தில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும், கைகால் செயல் இழந்தவர்களுக்கும் என அத்தியாவசியமாக உள்ளது. இந்நிலையில், தற்போது கொரோனாவால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், தொடர் சிகிச்சை அளிப்பதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டால் பலவீனம் அடையவும் வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல் அவர்கள் ஏற்கனவே எடுத்து வந்து பிசியோதெரபி சிகிச்சையினால் ஏற்பட்ட முன்னேற்றத்திலும் தடை ஏற்பட்டு ஊனத்தின் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் மருத்துவ வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆகவே இந்த இடர்பாடுகளை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியமும் தமிழ்நாடு பிசியோதெரபி கவுன்சிலும் இணைந்து மாவட்ட வாரியாக சிகிச்சைகள் மேற்கொள்ள பிசியேதெரபி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் அலைபேசி மூலமாக ஆலோசனைகளை வழங்குவார்கள். அதேபோல வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் சிகிச்சைக்கு உதவுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவரை சந்தித்து அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பார்கள். மேலும், இந்த சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு குழுவிற்கு 10 பேர் என 3 குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மருத்துவர்.ராஜேஸ் கண்ணா கூறும்போது;-

எங்கள் மருத்துவ குழுவினர் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறப்பாக பணியாற்ற தயாராக உள்ளனர். நாங்கள் வாட்ஸ்அப், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி சிகிச்சைக்கான உதவிகளை செய்யத் துவங்கியுள்ளோம். மேலும் பொதுமக்கள் எங்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தங்களின் மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். எனவே கோவை மக்கள் கீழ்க்கண்ட மருத்துவர்களின் எண்களை தொடர்பு கொண்டு தங்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யலாம் என தெரிவித்தார்

மருத்துவர்களின் தொடர்பு எண்கள்;-

1- பிராங்க்லின்: 9843671222

2- ராஜா செல்வகுமார்: 9043796777

3- ராஜேஸ் கண்ணா: 7200300032

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...