கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகளின் தொடர்ச்சியாக, நடமாடும் காய்கறி வாகனங்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் அவர்கள், அம்மன் கே.அர்ச்சுணன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நடமாடும் காய்கறிகள் விற்பனை அங்காடி வாகனங்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் மண்டலத்திற்கு 5 வாகனங்கள் வீதம் 25 வாகனங்களில் நடமாடும் காய்கறிகள் விற்பனை அங்காடி இன்று (02.04.2020) துவக்கி வைக்கப்பட்டது. ரூ.100 மதிப்பிலான காய்கறிகள் தொகுப்பில், தக்காளி 1 கிலோ, பெ.வெங்காயம் 500 கிராம், ப.மிளகாய் 150 கிராம், தேங்காய் ஒன்று, கத்தரிக்காய் 250 கிராம், வெண்டை 250 கிராம், புடலை 300 கிராம், பீர்க்கன் 500 கிராம், முருங்கை 250 கிராம், கறிவேப்பிலை சிறிது, கொத்தமல்லி சிறிது, புதினா சிறிது ஆகியவை அடங்கிய தொகுப்பு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.

பொதுமக்களின் வீடு தேடி நடமாடும் அங்காடிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவது காய்கறிகள் மாரக்கெட்களுக்கு பொதுமக்கள் சென்று வாங்குவதை தவிர்க்கும் பொருட்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க முடிகிறது என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர் ஆ.இலட்சுமணன் அவர்கள், நகா் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் அவர்கள், மண்டல உதவி ஆணையர்கள் தி.ர.ரவி(தெற்கு), செந்தில்குமார் ரத்தினம்(வடக்கு), மகேஷ்கனகராஜ் (மத்தியம்) ம.செல்வன் (கிழக்கு), ஏ.ஜே.செந்தில் அரசன் (மேற்கு), உதவி ஆணையர்கள் ௮ண்ணாதுரை (வருவாய்), எம்.சுந்தாராஜன் (பணியமைப்பு), வி.சரவணன்(கணக்கு), செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.