கோவையில் விற்பனை நேரம் முடிந்து பெட்ரோல் கேட்டு பங்க் ஊழியரை தாக்கிய சர்க்கிள் ரைட்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

கோவை: கோவை சூலூர் அருகே விற்பனை நேரம் முடிந்து பெட்ரோல் கேட்டு, பங்க் ஊழியரை தாக்கிய சர்க்கிள் ரைட்டரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

கோவை: கோவை சூலூர் அருகே விற்பனை நேரம் முடிந்து பெட்ரோல் கேட்டு, பங்க் ஊழியரை தாக்கிய சர்க்கிள் ரைட்டரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

சூலூர் சர்க்கிள் ரைட்டராக பணியாற்றி வருபவர் மாதப்பன். இவர் நேற்று சாதாரண உடையில் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு மாலை நான்கு மணியளவில் பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அசோக்ராஜா மதியம் இரண்டரை மணியோடு விநியோகம் முடிந்து விட்டது எனவும் சாவிகளை உரிமையாளர் எடுத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார்.

அப்போது, சர்க்கிள் ரைட்டர் மாதப்பன் தான் போலீஸ் என தெரிவித்து, பெட்ரோல் தர மறுக்கிறாயா என மிரட்டியதோடு மட்டுமல்லாமல் அசோக்ராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கு அவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அசோக்ராஜிக்கு கை முறிவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து மாதப்பனை ஆயுதப் படைக்கு மாற்ற உத்தரவிட்டார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...