கோவை: கோவை அருகே பாம்பு கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெகமம் காளியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (35). அப்பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி வேலை செய்து கொண்டு இருந்தபோது காளிமுத்துவை பாம்பு கடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்த காளிமுத்துவை பொதுமக்கள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.