கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி சட்ட விரோதமாக மதுபான விற்பனை; 32 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல்

கோவை: கோவையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 32 லிட்டர் கள் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கோவை: கோவையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 32 லிட்டர் கள் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து மது கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மதுபானங்கள் வாங்க குடிமகன்கள் பல்வேறு வகையில் முயல்கின்றனர்.

இந்நிலையில், கோவையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ராசுகவுண்டர் என்பவரிடம் 7 லிட்டர், பொள்ளாச்சி ஆலம்பாளையம் சண்முகசுந்தரத்திடம் 8 லிட்டர், பெ.ந.பாளையம் சதீஷிடம் 10 லிட்டர், பிளிச்சி சுப்ரமணியம் என்பவரிடம் 7 லிட்டர் என 32 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதே போல், ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து, அன்னூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோரிடம் இருந்து தலா 7 பாட்டில்கள் என விற்பனை செய்ய வைத்திருந்த மொத்தம் 14 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...