கோவை: கோவை அருகே மருத்துவமனையில் இறந்த மகனை காணச் சென்ற தாய் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அருகே மருத்துவமனையில் இறந்த மகனை காணச் சென்ற தாய் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி(53). கடந்த 28ம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது மகன் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் மகனை காண இரு சக்கர வாகனத்தில் பயணித்து உள்ளார்.
இந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது சுண்டபாளையம் அருகில் தவறி விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சாந்தி மரணமடைந்தார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இறந்த மகனை பார்க்கச் சென்ற தாயும் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.