பால் கொள்முதல்: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்த பினராய் விஜயன்!

திருவனந்தபுரம்: கேரளாவின் பால் கொள்முதல் கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: கேரளாவின் பால் கொள்முதல் கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.

இது குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் 1,80,000 லிட்டர் பால் மிச்சமாகிறது. இதையடுத்து, கேரளாவில் மிச்சமாகும் பாலை வாங்கிக் கொள்ள முடியுமா என்று தமிழக அரசிடம் கேட்டிருந்தோம். இதை பரிசீலிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், தினமும் கேரளாவில் இருந்து 50,000 லிட்டர் பாலை வாங்கிக் கொள்வதாக ஈரோடு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு பால் பவுடர் தயாரிக்க இந்த பால் வாங்கப் படுகிறது. கேரளாவின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...