கோவை: கோவை அருகே கூட்டு குடும்பமாக வாழ பிடிக்காமல் விஷம் அருந்திய பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த மேட்டுப்பாளையம் உமாபாளையம் பகுதியைச் சேர்ந்த பத்திரன்-சுந்தரியின் மகள் நந்தினி. சைக்கோதெரிபி பட்டதாரியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், கூட்டு குடும்பமாக வசித்து வந்த நந்தினிக்கு இது பிடிக்கவில்லை. இதனால் கடந்த 26ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
இதனையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 31ம் தேதி சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.