கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் கிருமி நாசினி தயாரிப்பு பணிகள் தீவிரம்!

கோவை: மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமி நாசினியை(Hand Sanitizer) காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் வேதியாளர்கள் மற்றும் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

கோவை: மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமி நாசினியை(Hand Sanitizer) காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் வேதியாளர்கள் மற்றும் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில், மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமி நாசினியை (Hand Sanitizer) காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் வேதியாளர்கள் மற்றும் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டு கோவை மாநகர சுகாதார அலுவலர்களிடம் சுமார் 100 லிட்டர் முதற்கட்டமாக வழங்கப்பட்டது. 

மேலும் சாடிவயல், மத்துவராயபுரம், நல்லுர்ப்பதி, சின்னாறு சோதனை சாவடி, போன்ற கிராமங்களில் கிருமிநாசினி தெளித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

அதேபோல, சீஷா முதியோர் இல்ல பயனாளிகள் மூலம் முகமூடி(face mask) தயாரிக்கப்பட்டு சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி செய்யப்பட்டன. இந்த நல்ல முயற்சியில் காருண்யா பல்கலைக்கழக தன்னார்வலர்கள், சீஷா தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் கிராம நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...