சென்னை: அரசு பள்ளிகளை தற்காலிக கொரோனோ தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை கொரோனோ நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கொரோனோ நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்புள்ள நபர்களை தனிமைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
அவ்வாறு தனிமைபடுத்தப்பட்டவர்களை கண்காணிப்பதற்கு ஏற்ற வகையில் தமிழகத்தில் உள்ள 2574 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளை கொரோனா நோய்த்தொற்று மையங்களாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி 37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். விரைவில் அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.