திருப்பூரில் குறைந்த விலையில் காய்கறிகளை வீடுகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை குறைந்த விலையில் வீடுகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை குறைந்த விலையில் வீடுகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். 



கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் சந்தைகளில் அதிகம் கூட்டம் கூடாதவாறு காய்கறிகள் அடங்கிய தொகுப்பை குறைந்த விலையில் வீடுகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலைய தற்காலிக சந்தையில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூரில் வீட்டு கண்காணிப்பில் 1346 பேர் உள்ளதாகவும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் சந்தைகளில் கூட்டத்தை குறைக்க காய்கறி தொகுப்பை குறைந்த விலையில் வீட்டுக்கே கொண்டு செல்லும் திட்டத்தை திருப்பூரில் இன்று முதல் செயல்படுத்தி இருக்கிறோம் என தெரிவித்தார்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகளில் கூட்டத்தை குறைக்க பல்வேறு ஆலோசனைகளை இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அதை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...