கோவை: கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மட்டும் தமிழகத்தில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது.

இதில் புதிதாக கோவையில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆறு பேர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இத்துடன் சேர்த்து 34 ஆக கோவையின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மேலும், இன்று உறுதி செய்யப்பட்ட 28 பேரில் 27 பேர் டெல்லி நிகழ்வுக்கு சென்று வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.