சமூக விலகலை கடைப்பிடிக்க கோவையில் நேரடியாக காய்கறிகளை விற்க மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை - எம்.பி பி.ஆர்.நடராஜன்

கோவை: கோவையில் சமூக விலகலை உறுதிப்படுத்தவும், அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் நடமாட்டத்தை குறைத்திடும் வகையில் கோவையில் 100 வார்டுகளிலும் நடமாடும் காய்கறி சந்தையினை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை: கோவையில் சமூக விலகலை உறுதிப்படுத்தவும், அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் நடமாட்டத்தை குறைத்திடும் வகையில் கோவையில் 100 வார்டுகளிலும் நடமாடும் காய்கறி சந்தையினை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுக்குறித்து எம்.பி.நடராஜன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் அதன் பரவலை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரிய செயல், என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தனித்திரு- விலகியிரு என்கிற அரசின் வலியுறுத்தலை பெரும்பாலான கோவை மக்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் வேறுவழியின்றி காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் சந்தைக்கு வந்தாக வேண்டிய சூழல் உள்ளதை மறுக்க முடியாது. 

இதன் காரணமாக காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட மார்க்கெட் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏராளமானோர் கூடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதனை தவிர்க்கும் வகையில் பொதுமக்களின் வீட்டிற்கே குறைந்த விலையில் காய்கறி தொகுப்பை கொண்டு போய் சேர்க்கும் நடவடிக்கையை தூத்துக்குடி, மதுரை போன்ற மற்ற மாவட்டங்களில் செயல் படுத்துவது போன்று கோவையிலும் பின்பற்றினால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையரிடம் கலந்தாலோசித்து மாநகராட்சி நிர்வாகத்தின் வசம் உள்ள வாகனத்தை பயன்படுத்தி சுமார் ஐந்து நாட்கள் பயன்படுத்தும் வகையிலான காய்கறி தொகுப்பை மார்க்கெட் வியாபரிகளிடம் பேசி குறைந்த விலை நிர்ணயம் செய்யவும் அதனை மக்கள் வசிப்பிடத்திற்கு சென்று விற்பனை செய்யலாம், என யோசனை தெரிவித்தார்.

மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் எந்தந்த வார்டுகள், எந்தந்த தேதி என்பதை நிர்ணயம் செய்து விநியோகிக்கலாம் எனவும் இந்நடவடிக்கைக்கு தன்னார்வலர்களை பயன்படுத்தலாம், என குறிப்பிட்டுள்ளார். 

இதன் முலம் சமூக விலகலை உறுதிப்படுத்திடவும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் எம்.பி நடராஜன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகம் இதனை உடனடியாக பரிசீலனை செய்து முயற்சியினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்து உள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...