கொரோனா நிவாரணத் தொகைக்கான டோக்கனை அதிமுகவினர் அல்லாது அரசு அலுவலர்கள் மூலம் வழங்க வேண்டும் - எம்எல்ஏ நா.கார்த்திக் கோரிக்கை

கோவை: தமிழகத்தில் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் கொரோனா நிவாரணத்தொகைக்கான டோக்கன்களை அதிமுகவினர் விநியோகிக்காமல் அரசு அலுவலர்கள் மூலம் விநியோகிக்க வேண்டும் என கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக வை சேர்ந்த நா. கார்த்திக் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் கொரோனா நிவாரணத்தொகைக்கான டோக்கன்களை அதிமுகவினர் விநியோகிக்காமல் அரசு அலுவலர்கள் மூலம் விநியோகிக்க வேண்டும் என கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக வை சேர்ந்த நா. கார்த்திக் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் எந்த பணியினையும் மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் கூலித்தொழிலாளர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தனர். 

இதுக்குறித்து கோவை திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும வழங்கப்படும் தொகையினை நியாய விலைகடைகளில் பெறுவதற்கு முன்னர் கோவையில் வீடு வீடாக சென்று அதிமுக கட்சியினர் அதற்கான டோக்கன்களை வழங்கி வருகின்றனர். இது முறையான செயலாக இருக்காது, என கருத்தினை தெரிவித்தார். 

மேலும், இந்த கொரோனா நிவாரணம் என்பது அரசு அலுவலர்கள் மூலமாக விநியோகிக்காமல் ஒரு கட்சி சார்பில் உள்ளவர்களை வைத்து செயல்படுத்த முயற்சிப்பது பலவித முறைகேடுகள் நடக்க வழிவகிக்கும் என திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார். 

எனவே, அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிக்கு டோக்கன் விநியோகம் செய்வதை ஆளுங்கட்சியான அதிமுகவினர் மூலமாக விநியோகிக்காமல், அரசு அலுவலர்கள் மூலம் விநியோகிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...