கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு மூலிகை டீயை இலவசமாக வழங்கிவருகிறார் அன்னூர் ஜக்குபாய்

கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அன்னூரில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு புத்துணர்ச்சியையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் ஏற்படுத்தும் விதமாக மூலிமை டீயினை இலவசமாக வழங்கிவருகிறார் டீ மாஸ்டரான ஜக்குபாய்.

கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அன்னூரில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு புத்துணர்ச்சியையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் ஏற்படுத்தும் விதமாக மூலிமை டீயினை இலவசமாக வழங்கிவருகிறார் டீ மாஸ்டரான ஜக்குபாய்.



கோவை மாவட்டம் அன்னூர் புளியம்பட்டியை சேர்ந்தவர் தான் இந்த ஜக்குபாய். திருமண விழாக்களில் மூலிகை டீயினை ஆர்டர் எடுத்து விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், ஊரடங்கு உத்தரவினால் பணியினை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளார்.



இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள், காவலர்கள் என அனைவருக்கும் இலவசமாக மூலிகை டீ வழங்கி வருகின்றார் ஜக்குபாய். அன்னூரில் இருந்து தினமும் காலை 2000 பேருக்கான மூலிகை டீ யுடன் தனது காரில் கிளம்பி வரும் போது ஜ வழியில் பாதுகாப்பு பணியில் உள்ள ஈடுபட்டுவருவர்களுக்கு மூலிகை டீ வழங்கி வருகின்றார்.



இந்த மூலிகை டீ தயாரிக்க தினமும் 5000 ரூபாய் செலவாகின்றது எனவும் இதில் கோவக்காய், நெல்லிக்காய், மாங்காய்,சுக்கு, மிளகு,திப்பிலி என மொத்தம் 82 விதமான பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் மக்களுக்கு புத்துணர்வை கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு கொடுக்கும் என தெரிவிக்கின்றார்.



இந்த பணியினை சொந்த விருப்பத்தின் பேரில் மேற்கொண்டுவருவதாக கூறும் இவர், இரவு பகலாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு இது தெம்பளிக்கும் என தெரிவித்தார். மேலும் எந்த எதிர்ப்பார்ப்பும் இதில் இல்லை என தெரிவிக்கும் இவர் தன்னிடம் உள்ள பொருட்களை வைத்து தயாரிக்கும் டீயினை வருகின்ற 13 ஆம் தேதி விநியோகம் செய்ய இருப்பதாக மகிழ்ச்சியுன் தெரிவிக்கிறார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...