கோவையில் துணை ராணுவ படையினர் இறங்கியுள்ளதாக பரவும் தவறான வீடியோ; வதந்திகளைப் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அதிகாரிகள் எச்சரிக்கை

கோவை: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் பொதுமக்கள் நடமாட்டம் குறையாததால் கோவையில் துணை ராணுவம் இறங்கியுள்ளதாக வாட்ஸ் அப்பில் பரவும் தவறான வீடியோ மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் பொதுமக்கள் நடமாட்டம் குறையாததால் கோவையில் துணை ராணுவம் இறங்கியுள்ளதாக வாட்ஸ் அப்பில் பரவும் தவறான வீடியோ மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்கள் ஆங்காங்கே வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்களை கட்டுபடுத்த கோவைக்கு துணை ராணுவம் வர உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று துணை ராணுவ படையினர், கோவை மாநகருக்குள் ஊர்வலமாக வருவதாக பழைய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வீடியோ சி ஏ ஏ போராட்டத்தின் தொடர்ச்சியில் கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் அதிவிரைவு படையினர் ஊர்வலமாக வந்த வீடியோ என தெரியவந்துள்ளது.

மேலும், இதுபோன்ற தவறான வீடியோக்கள் பரப்பப்படுவது பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்துவதால் வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...