குன்னூரில் சாலையோர கடைகளை அமைப்பதில் தொடரும் பிரச்சினை: வருவாய் மற்றும் காவல் துறையின் கருத்து வேறுபாட்டால் சட்டமன்ற உறுப்பினர் அதிருப்தி

நீலகிரி: கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலை கடைப்பிடிக்கும் விதமாக மார்க்கெட் பகுதியில் செயல்பட்ட கடைகள் அடிக்கடி பல பகுதிகளுக்கு மாற்றப்படுவதாக நீலகிரி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமுவிடம் புகார் எழுந்துள்ளது.

நீலகிரி: கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலை கடைப்பிடிக்கும் விதமாக மார்க்கெட் பகுதியில் செயல்பட்ட கடைகள் அடிக்கடி பல பகுதிகளுக்கு மாற்றப்படுவதாக நீலகிரி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமுவிடம் புகார் எழுந்துள்ளது. 



தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் மார்க்கெட் பகுதிகளை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, மார்க்கெட் பகுதியில் இருந்த கடைகள், பேருந்து நிலையம், மவுண்ட் ராேடு, விபி தெரு பாேன்ற பகுதிகளில் கடந்த ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரை மாற்றி அமைக்கப்பட்டதால் சமூக விலகலை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். 

இந்த நிலையில், குன்னூர் மார்கெட்டை சேர்ந்த இரு சங்கத்தினரும் தங்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், சங்கத்தில் இல்லாத நடைபாதை வியாபாரிகளும் பிரச்சினையை ஒரு புறம் தாெடர்ந்து வருகின்றனர். 

குன்னூரில் போதிய இடம் இல்லாததால், இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக முன்பு இருந்தது பாேல் கார் நிறுத்துமிடத்தில் ஒரு பகுதியில் கடைக்காரர்களை அனுமதிக்க வருவாய் துறையினர் வேண்டு காேள் விடுக்கின்றனர். ஆனால், காவல் துறையினர் வருவாய் துறையினரின் கோரிக்கையை நிராகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

குன்னூரில் வருவாய் துறை மற்றும் காவல் துறையின் கருத்து வேறுபாட்டால் மக்கள் பணி பாதிப்பதாக கூறி குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...