கோவை: டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளதால், கோவையிலிருந்து சென்ற 82 பேரில் 44 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ளவர்களுக்கு விரைவில் பரிசோதனை நடத்த இருப்பதாக கோவை ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

தமிழக அரசின் அறிவிப்பின் படி, அத்தியாவசியமான தேவைகளுக்காக வெளியூர் செல்ல வேண்டி இருப்பவர்கள் அனுமதி வாங்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்களிடம் ஆட்சியரே நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவ மனையில் அனைத்து சிகிச்சை வசதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளை சேர்ந்த 82 பேர் டெல்லி மாநாட்டிறகு சென்று வந்ததால் அவர்களை பரிசோதனை செய்வதற்காக ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் அவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். முதற்கட்டமாக 82 பேரில் 44 பேரின் இரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும், மீதமுள்ளவர்களுக்கு விரைவில் மற்றவர்களுக்கு சோதனை நடத்தப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றது என தெரிவித்த ஆட்சியர், 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 வரை இருக்கும் நிலையில் பொதுமக்கள் அதற்கான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கூறினார்.
இதோடு 100 சதவீதம் அரசின் அறிவுரைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்த ஆட்சியர் வீட்டிற்கு ஒருவர் வந்து காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும் என கூறினார். மேலும் வரும் வியாழக்கிழமையில் இருந்து ரேசன் கடைக்கு 100 பேருக்கு மட்டுமே நிவாரண பொருட்கள்,நிவாரண தொகை கொடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தபட்டு இருக்கின்ற நிலையில் வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்க ரேசன்கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் இராசாமணி தெரிவித்தார்.