கோவை: டெல்லி சென்று மேட்டுப்பாளையம் திரும்பிய 30 நபர்களுக்கு கொரானோ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதை மாவட்ட எஸ்.பி சுஜித் குமார் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கடந்த 20ம் தேதி டெல்லிக்கு ஜமாத் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் மேட்டுப்பாளையம் திரும்பியுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரானோ தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், போலீசார் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணித்தோர் பற்றிய பட்டியல் தயாரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இந்த 30 பேருக்கும் இரு தினங்களுக்கு கொரானோ பரிசோதனை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கொரானோ பரிசோதனை செய்யப்பட்டதில் 30ல் 11 பேருக்கு கொரானோ பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 19 நபர்கள் கொரானோ வார்டில் தற்போது வரை உள்ளனர். இந்த நிலையில் தற்போது அரசு மருத்துவமனை கொரானோ பிரிவு அருகே 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு மருத்துவமனை முழுவதும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் கொரானோ பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் நிலைமை குறித்து கோவை மாவட்ட எஸ்.பி சுஜீத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டதுடன் போலீசார் கொரானோ வார்டுக்குள் நுழைய வேண்டாம் எனவும் சமூக இடைவேளையை கட்டாயம் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்கவும் போலீசாரை அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் தலைமை மருத்துவரிடம் கேட்ட போது, தற்போது உள்ள 19 பேரின் ரத்த மாதிரிகளின் அறிக்கை இன்னும் வரவில்லை எனவும் அதன் பின்னரே இது குறித்து பேச முடியும் என தெரிவித்தார். தற்போது அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.