கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 5000 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - மாநகராட்சி ஆணையர் தகவல்
கோவை: கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக கோவையில் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்றுதாகவும் அதில் 5000 தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக இன்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.
கொரோனாவினை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. குறிப்பாக கோவை நகரினை பொறுத்தவரை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது பேசிய மாநகராட்சி ஆணையர், கோவை மாநகர் முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தூய்மைப்பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் அர்ப்பணிப்புடன் செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், நகர் முழுவதும் ஸ்பரேயர் மூலம் கிருமி நாசினி மருந்து தெளித்தல், துண்டு பிரசுரங்கள் வெளியிடுதல், ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம், வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் இருமல் போன்றவற்றோடு யாரும் பாதிப்படைந்துள்ளரா என்பது பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருவதாக ஆணையர் தெரிவித்தார்.
இதோடு 144 தடை உத்தரவினை பின்பற்றி மக்கள் வீட்டில் உள்ளே இருக்க வேண்டும், வெளியில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சளி, காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார். மேலும், கைகளை குறைந்தது 20 நிமிடம் கழுவி தூய்மையாக இருக்க வேண்டும், என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதோடு, அம்மா உணவகங்களில் 24 மணி நேரமும் உணவு தரமானதாகவும், தடையின்றி கிடைத்திட சம்பந்தப்பட்டவர்கள் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு சமுதாய சமையலறைகள் அமைத்து உணவு விநியோகம் செய்யப்பட்டுவருவதாக கூறினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகர பொறியாளர், நகர்நல அலுவலர், மண்டல உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.