திருப்பூர் அருகே ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள்! பொதுமக்கள் பாராட்டு

திருப்பூர்: திருப்பூரில் பிரசவ வலி எடுத்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமானதால், போலீசார் ஜீப்பில் அழைத்துச் சென்று உரிய நேரத்தில் மருத்துவமனை சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் பிரசவ வலி எடுத்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமானதால், போலீசார் ஜீப்பில் அழைத்துச் சென்று உரிய நேரத்தில் மருத்துவமனை சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் - வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகேஸ்வரிக்கு இன்று திடீரென பிரசவ வலி எடுத்தது. இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்த நிலையில், ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமானது. 

இந்த நிலையில், அந்த வழியாக ரோந்து பணிக்காக வந்த வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தகவலறிந்து அவரது போலீஸ் ஜீப்பில், சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி, கான்ஸ்டபிள் சதீஷ் ஆகியோருடன் மகாலட்சுமியை ஜீப்பில் ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

கர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய போலீசாரின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...