சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாததால் கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு!

கோவை: கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை மீறியதாக கோவை உக்கடம் மீன்மார்க்கெட்டை மூட வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை மீறியதாக கோவை உக்கடம் மீன்மார்க்கெட்டை மூட வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறி, இறைச்சி, மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், இங்கு கூடும் மக்கள் போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையங்களில் தினசரி சந்தைகள் திறக்கப்பட்டு, மக்கள் போதிய இடைவெளியைப் பின்பற்றி காய்கறி வாங்கிச் செல்ல கடந்த சனிக்கிழமை முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிலையில், உக்கடம் மீன் சந்தையில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே அதிக அளவில் கூடியது. மக்கள் அதிக அளவில் மீன் வாங்க குவிந்ததால் சந்தையில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதிமுறையும் மீறப்பட்டது.

கொரோனா நோய்த் தாக்கம் அதிகரித்து விடக் கூடாது என மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசின் உத்தரவை பின்பற்றாமல் மீன் சந்தையில் சமூக இடைவெளிவிட்டு நிற்காமல் மக்கள் கூட்டமாக நின்று மீன் வாங்கியது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான மீன் சந்தையை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை திறக்க அனுமதிக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினா்.

இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை மீறியதாக கோவை உக்கடம் மீன்மார்க்கெட்டை மூட வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...