கோவையில் மோடி கிச்சன்..! பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்

கோவை: கோவையில் மோடி கிச்சனை வீடியோ கான்பரன்சிங் மூலம் பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.

கோவை: கோவையில் மோடி கிச்சனை வீடியோ கான்பரன்சிங் மூலம் பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மருந்துகள், பால் தவிர மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் இரண்டு வரை செயல்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வட மாநிலத்தில் இருந்து வந்து தங்கி உள்ளவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உணவு தடையின்றி கிடைக்கப் பெறும் வகையில் பேரிடர் மேலாண்மை சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உணவுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் மோடி கிச்சன் துவங்கப்பட்டு உள்ளது. 



இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் கிராஸ் கட் பகுதியில் தலைவாசல் காம்பளக்ஸ் வளாகத்தில் மோடி கிச்சனை பா.ஜ.க.மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். 



இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு உணவுகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் வாகனங்களில் கொண்டு சென்று உணவு இல்லாதவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...