கொரோனா அறிகுறியுடன் ஆனைமலையைச் சேர்ந்த இருவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதி!

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியை சேர்ந்த 7 பேர் டெல்லி சென்று வந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களது இரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதில் இரண்டு பேர் கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது தீவிர கண்காணிப்புக்கு வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பலரை மருத்துவ கண்காணிப்பில் வைக்க சுகாதாரத்துறை குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு ஆனைமலை பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆனைமலையில் இருந்து, காளியாபுரம், கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...