கோவை: கர்ப்பிணி பெண்கள் உடல்நிலை குறித்து தனி கவனம் செலுத்துமாறு மருத்துவ அலுவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், வருகின்ற இரு மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 இலட்சம் தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் உடல்நிலை குறித்து தனிகவனம் செலுத்துமாறு மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தேவையான உதவிகளுக்கு 102, 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.