கோவை கே.கே புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நோய்தடுப்பு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது

கோவை: கோவையில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பெண்ணின் வீட்டைச் சுற்றியுள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்ய 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய தடுப்பு குழுவினர் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பெண்ணின் வீட்டைச் சுற்றியுள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்ய 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய தடுப்பு குழுவினர் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 10 மாவட்டங்களிலும் சிறப்புக் குழு அமைத்து வீடு வீடாக ஆய்வு செய்யப்படும் என சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டிற்கு சென்று வந்த கே.கே.புதுரைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அந்த இளம்பெண் வீடு அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதிகளை ஒவ்வொரு கிலோ மீட்டராக தனித்தனியாக சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை கணக்கிடப்பட்டு வீடுகள் தோறும் ஆய்வு மேற்கொள்ள 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் ஒரு கிலோ மீட்டரில் 12 ஆயிரத்து 450 வீடுகள், 49 ஆயிரத்து 800 பேர், 2 ஆவது கிலோ மீட்டரில் 13 ஆயிரத்து 684 வீடுகள், 54 ஆயிரத்து 736 பேர், 3 ஆவது கிலோ மீட்டரில் 14 ஆயிரத்து 134 வீடுகள், 56 ஆயிரத்து 536 பேர், 4 ஆவது கிலோ மீட்டரில் 11 ஆயிரத்து 988 வீடுகள், 47 ஆயிரத்து 952 பேர் மற்றும் 5 ஆவது கிலோ மீட்டரில் 13 ஆயிரத்து 856 வீடுகள், 55 ஆயிரத்து 424 பேர் சேர்த்து மொத்தமாக 66 ஆயிரத்து 112 வீடுகளும், 2 லட்சத்து 64 ஆயிரத்து 448 பேர் வசிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளன.

இவ்வாறு கணக்கிடப்பட்ட வீடுகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக பரிசோதனைகளில் ஈடுபடுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல, கே.கே புதூரை சுற்றியுள்ள பகுதிகளில் நோய்தடுப்பு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...