கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பெண் மருத்துவர் உட்பட நான்கு பேருக்கு, கொரோனா தொற்று உறுதி!

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பெண் மருத்துவர் உட்பட நான்கு பேருக்கு , கொரோனா தொற்று உறுதி!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவர், அவரது குழந்தை, அவரது தாயார் மற்றும் அவர் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த இரண்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்த ஈரோடு ரயில்வே பணியாளருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 

அப்பணியாளருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அப்பெண் மருத்துவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவருக்கும் மருத்துவரின் நெருங்கிய தொடர்புள்ளவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டது. 

இந்தநிலையில் தற்போது வெளியான முடிவில், 29 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மருத்துவர், 51 வயது மதிக்கத்தக்க மருத்துவரின் தாயார், மருத்துவரின் 10 மாத குழந்தை, 58 வயது மதிக்கத்தக்க மருத்துவரின் வீட்டில் பணிபுரியும் பெண் பணியாளர் என மொத்தம் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

அதேபோல மருத்துவரின் கணவர் மற்றும் 2 வயது ஆண் குழந்தைக்கான பரிசோதனை முடிவுகளுக்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் காத்திருக்கின்றனர்.

தற்போது கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று வார்டில் மொத்தம் ஒன்பது பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...