கோவை: 144 தடை உத்தரவால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள நிலையில் ஆதரவற்ற நிலையில் மன நலம் பாதிக்கப்பட்டவர் சுற்றித்திரிந்ததை கண்ட போலீசார் மனிதநேயத்துடன் அவருக்கு சிகை திருத்தி புத்தாடை அணிவித்து உணவு கொடுத்து ஆசிரமத்தில் சேர்த்த நிகழ்வுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள நிலையில் சாலையின் ஓரங்களில் உறங்கும் ஆதரவற்றவர்கள் உணவு இன்றி கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும், நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு இல்லாமல் பீதியில் உறைந்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் சாலையில் உறங்கும் ஆதரவற்றவர்களுக்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு முதியவரை போலிஸார் மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அந்த முதியவருக்கு முடி திருத்தி, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, உணவு வழங்கியதுடன் அவரை தற்காலிக விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
இந்த போலீஸாரின் மனிதநேய பணிகள் குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.