கோவை: மேட்டுப்பாளையத்தில் கொரானோ குறித்த அச்சம் இன்றி காய்கறி மார்க்கெட்டிலும் இறைச்சி கடைகளிலும் இன்று அலைமோதிய மக்களிடம் வீட்டுக்கு திரும்பி செல்ல அறிவுறுத்திய எம்.எல்.ஏ சின்னராஜ்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் கொரானோ குறித்த அச்சம் இன்றி காய்கறி மார்க்கெட்டிலும் இறைச்சி கடைகளிலும் இன்று அலைமோதிய மக்களிடம் வீட்டுக்கு திரும்பி செல்ல அறிவுறுத்திய அதிமுக எம்.எல்.ஏ சின்னராஜ்.
கொரானோ நோய் தாக்கம் காரணமாக உலகே பீதியில் உள்ள நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று காலை மக்கள் எவ்வித பயமும் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டிலும் இறைச்சி கடைகளிலும் கூட்டம் கூட்டமாக சமூக இடைவேளையை பின்பற்றாமல் நெருக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, ஞாயிற்றுகிழமை என்பதால் அண்ணாஜீ ராவ் ரோட்டில் உள்ள இறைச்சி கடைகளில் இறைச்சியை வாங்க ஒருவருக்கொருவர் எந்தவித இடைவேளையும் இன்றி முந்தி வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் போட்டி போட்டு கொண்டு இறைச்சி வாங்குவதிலேயே அக்கறை காட்டினர்.

மேலும், இதே காட்சிகள் தான் மளிக்கைக்கடையிலும், காய்கறி மார்க்கெட் பகுதியிலேயும் அரங்கேறியது.
இதனையடுத்து தூய்மை பணியை ஆய்வு செய்ய அங்கு வந்த மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சின்னராஜ் மக்கள் கூட்டமாக இருப்பது கண்டு ஒருவருக்கொருவர் இடையே ஒரு மீட்டர் இடைவேளை விட்டு நில்லுங்கள், இல்லையெனில் வீடுகளுக்கே திரும்பி செல்லுங்கள் என அறிவுறுத்தினர்.
மேலும் காவல்துனையினரை வரவழைத்து அவர்களை சீர்படுத்தவும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, மேட்டுப்பாளையம் தீயனைப்பு துறையினர் மூலம் அவர்களது வாகனம் மூலம் கிருமினாசி மருந்துகளும் அந்த சாலை முழுவதும் தெளிக்கப்பட்டது. அத்துடன் பொருட்களை வாங்க வந்த பொதுமக்களின் வாகனங்களுக்கும் கிருமினாசினி தெளிக்கப்பட்டது.