கோவை கருமத்தம்பட்டியிில் 144 தடை உத்தரவையடுத்து சட்டத்தையும் தடியையும் கையிலெடுத்த நபர் கைது

கோவை: நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கருமத்தம்பட்டி காவல் எல்லையில் சட்டத்தை கையில் எடுத்த நபர் கையில் தடியுடன் இளைஞரை தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.



கோவை: நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கருமத்தம்பட்டி காவல் எல்லையில் சட்டத்தை கையில் எடுத்த நபர் கையில் தடியுடன் இளைஞரை தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் ஒன்று கூடாத படி காவல்துறையினர் தொடர்ச்சியாக விழிப்புணர்வு செய்து வருகின்றனர். 

அதேபோல சாலைகளில் தடுப்பு அமைத்து அனாவிசியமாக பயணிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி காவல் எல்லையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது ஒரு நபர் தடியால் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த வீடியோ காட்சியை தொடர்ந்து அந்த நபரை கைது செய்யும் படி எதிர்ப்புகள் கிளம்பியது.

இப்படியிருக்க இந்த வீடியோ தொடர்பாக தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மேற்பார்வையில் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த 47 வயது மதிக்கத்தக்க ஊஞ்சம்பாளையத்தைச் சேர்ந்த தண்டபாணியை, கணியூர் அருகே வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர். 

மேலும், கைது செய்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 188 ,269, 271,341, 294 b, 323, 506 ii ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...