கோவையில் 144 தடை உத்தரவை மீறியதாக மொத்தம் 187 வழக்குகள் பதிவு; 237 பேர் கைது

கோவை: கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை என மொத்தம் இரண்டு காவல் எல்லைகளிலும் 144 தடை உத்தரவை மீறியதாக மொத்தம் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை என மொத்தம் இரண்டு காவல் எல்லைகளிலும் 144 தடை உத்தரவை மீறியதாக மொத்தம் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்கள் ஆங்காங்கே வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் உத்தரவின்படி போலீஸார் தற்போது 144 தடை உத்தரவை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இப்படி கோவை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக 74 வழக்குகள் போடப்பட்டு 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 17 இருசக்கர வாகனங்கள் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, கோவை புறநகர் மாவட்டத்தில் 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவளிடமிருந்து 47 இருசக்கர வாகனங்கள் 4 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இப்படி கோவை மாவட்டம் முழுவதும் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 64 மோட்டார்சைக்கிள்கள் 5 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...