முதல்வர் பாராட்டை தொடர்ந்து, கூடுதல் உற்சாகத்துடன் பணியில் ஈடுபடும் கோவை போலீசார்..!

கோவை: கோவை மக்கள் மற்றும் காவல்துறையினர் ஊரடங்கினையும், சமூக இடைவெளியையும் முறையாக பின்பற்றிவருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். முதல்வரின் வார்த்தைகள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மக்கள் மற்றும் காவல்துறையினர் ஊரடங்கினையும், சமூக இடைவெளியையும் முறையாக பின்பற்றிவருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். முதல்வரின் வார்த்தைகள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து கோவை மாநகரம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுவருகிறது. 



அதேபோல சமூக கூடலை கட்டுப்படுத்த போலீசாரும் பாதுகாப்பு வளையங்களை அமைத்து அநாவசிய பயணங்களை தடுத்து வருகின்றனர். மேலும் சந்தை, மளிகை கடை, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என கண்காணித்து வருகின்றனர்.



இது தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் கோவை மக்களுக்கும், காவல்துறைக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.



இது காவல்துறையின் இடைவிடா பணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் உத்வேகத்தைக் கொடுக்கிறது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த உத்வேகத்தைக் கொடுத்த முதல்வருக்கு அனைவரின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக கோவை மாநகர போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று, ராமநாதபுரம், ஒலம்பஸ், புலியகுளம், சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கைகளை கழுவி முகக் கவசங்கள் அணிந்து தொடர்ந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் எனவும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...