கோவை: வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்களுக்கு காவல் ஆய்வாளர் கொரானா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தடுப்பு நடவடிக்கையின் படி 144 மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை மற்றும் மருந்து பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி ஒரு சிலர் அடிக்கடி நடந்தும் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வால்பாறை நகரில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் தபால் நிலையம், பழைய பேருந்து நிலையம், ஸ்டான்மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் ரோந்து பணியினை மேற்கொண்டனர்.

அப்போது, சாலைகளில் சென்றவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அடிக்கடி சாலைகளில் நடமாடியவர்களை காந்தி சிலை வளாகத்திற்கு வரவழைத்து சமூக விலக்கு கோட்டில் நிற்க வைத்து கொரானா பரவல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், தேவையில்லாமல் சாலைகளில் நடமாட மாட்டோம் என்று உறுதி மொழி எடுக்க வைத்தார். அதே ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்கி வைத்து கொள்ள வேண்டும் எனவும் அடிக்கடி கடைகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் கொரோனா வராமல் பாதுகாத்திட வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் வலியுறுத்தினார்.