கொரோனா எதிரொலி: கோவையில் பொதுமக்களுக்கு உதவி செய்ய மாநகர காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவக்கம்!

கோவை: கொரோனா எதிரொலியாக உணவு கிடைக்காமல் இருப்பவர்களுக்கும், தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவும், பல்வேறு சந்தேகங்களையும் தீர்க்கும் வகையிலும் மாநகர காவல் துறை சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா எதிரொலியாக உணவு கிடைக்காமல் இருப்பவர்களுக்கும், தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவும், பல்வேறு சந்தேகங்களையும் தீர்க்கும் வகையிலும் மாநகர காவல் துறை சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 



அதேபோல, கோவை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் சமூக விலகலை பின்பற்ற பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் உதவும் வகையில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் தற்போது "மினி கன்ட்ரோல் ரூம்" தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையானது மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் செயல்பட உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை குழுவில் ஆய்வாளர் வீரம்மாள், ஒரு உதவி ஆய்வாளர், 8 காவலர்கள் உட்பட 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல இந்த கட்டுப்பாட்டு அறையானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து செயல்பட இருக்கிறது. 

மேலும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 0422 - 2305758 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த எண்ணில் தொடர்பு கொள்பவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகள் செய்யவும், சந்தேகங்களை தீர்க்கவும் மாநகர காவல்துறை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கொரோனா தொற்று ஏற்படுபவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ய பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய பிரத்யேக ஆடைகள் மாநகர காவல் துறையினருக்கு வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஒத்திகைகளும் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...