கோவை: வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 4484 பேர் அவர்களின் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி உட்பட கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு காய்கறிகள் வாங்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அம்மா உணவகங்களில் 3 நேரமும் உணவகங்கள் செயல்படும் என்று தெரிவித்தார்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனையாக செயல்படுகின்றது எனவும் இதுவரை 147 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றவர், வெளிநாடுகளில் இருந்து வந்த 4484 பேர் அவர்களின் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்தில் உள்ள 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து 5 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், அதிமுக சார்பில் 25 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள், மருத்துகள் இன்று கோவை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அத்தியாவசிய பொருட்கள் கேரளா உட்பட அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றது என்றார்.
தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த இரட்டை ஊதியம் ஓப்பந்த தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவித்த அவர், இது போன்ற செயல்பாடுகளில் நிரந்தர பணியாளர், ஒப்பந்த பணியாளர் என வேறுபடுத்தி இந்த அரசு பார்க்காது என்று கூறினார்.
மேலும், கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை தடுத்து அங்குள்ள முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைப்பதில் இனி தட்டுப்பாடு இருக்காது எனவும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து ஆலோசித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதேபோல, வடமாநிலத்தவருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும் ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை அவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடமாநில தொழிலாளர்களின் பிரச்சினையை மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.