கோவையில்‌ பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக வார்டு!

கோவை: கோவையில்‌ பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பாக கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரத்யேக வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில்‌ பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பாக கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரத்யேக வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கடந்த 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.



இந்த நிலையில், பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களுக்கும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க 200 படுக்கைகள் கொண்ட பிரத்யேக தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. 



இதில் 20 படுக்கைகள் சிக்கலான வழக்குகளை கவனித்துக்கொள்ளவும், வென்டிலேட்டர் வசதிகளுடன் 10 படுக்கைகள் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கொரொனா நோயால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக தனி ஆபரேஷன் தியேட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய டாக்டர் சுதா ராமலிங்கம், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதற்காக கொரோனா வைரஸ் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யும் வசதி தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கான ஒப்புதல் கிடைத்ததும் கொரோனா பரிசோதனை கூட மருத்துவமனையில் செய்யப்படும் என தெரிவித்தார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...