கோவையில்‌ கேஎம்சிஹெச்‌ மருத்துவமனை சார்பில் கொரோனா வைரஸ்‌ காய்ச்சல்‌ சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனை!

கோவை: கோவையில்‌ முதன்முறையாக கேஎம்சிஹெச்‌ மருத்துவமனையின்‌ சார்பாக பிரத்யேக கொரோனா வைரஸ் காய்ச்சல்‌ சிகிச்சைக்காக மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையில்‌ முதன்முறையாக கேஎம்சிஹெச்‌ மருத்துவமனையின்‌ சார்பாக பிரத்யேக கொரோனா வைரஸ் காய்ச்சல்‌ சிகிச்சைக்காக மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்திவரும்‌ கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளும்‌ மற்றும்‌ உள்ளூர்‌ நிர்வாகமும்‌ பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தின்‌ முன்னணி பல்துறை மருத்துவமனைகளில்‌ ஒன்றான கேஎம்சிஹெச்‌ மருத்துவமனை காளப்பட்டி ரோட்டில்‌ 128 படுக்கைகளுடன்‌ கோவிட்‌-19 கொரோனா வைரஸ்‌ காய்ச்சல்‌ சிகிச்சைக்காக ஒரு பிரத்யேக மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளது.

இது கொரோனா காய்ச்சல்‌ தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும்‌ ஒரு பிரத்யேக கட்டமைப்பாகும்‌. இது கேஎம்சிஹெச்‌ பிரதான மருத்துவமனையில்‌ இருந்து முற்றிலும்‌ தனித்து செயல்படும்‌. இந்த சிறப்பு கொரோனா காய்ச்சல்‌ மருத்துவமனைக்கென்றே பயிற்சி பெற்ற பிரத்யேக மருத்துவக்‌ குழுவினர்‌ உள்ளனர்‌.

இப்புதிய சிறப்பு மருத்துவமனை இம்மாதம்‌ 26-ம்‌ தேதி முதல்‌ செயல்படும்‌ என்று கேஎம்சிஹெச்‌ மருத்துவமனையின்‌ தலைவர்‌ டாக்டர்‌ நலலா ஜி பழனிசாமி அவர்கள்‌ தெரிவித்தார்‌. கொரோனா நோயாளிகள்‌ அல்லது நோய்‌ உள்ளதாக சந்தேகிக்கப்படுவோர்‌ மற்றும்‌ காய்ச்சல்‌ உள்ளவர்கள்‌ மட்டுமே இந்த மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்படுவர்‌ என்று தெரிவித்தார்‌. மேலும், இதர நோய்கள்‌ குறித்து மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர்‌ அவினாசி ரோட்டில்‌ உள்ள நுழைவு வாயில்‌ வழியே வரவேண்டும்‌ என்று அவர்‌ கூறினார்‌

144 தடை உத்தரவு பிறப்பித்ததற்காக மாநில மற்றும்‌ மத்திய அரசின்‌ நடவடிக்கைகளை பாராட்டிய அவர், மக்கள்‌ வெளியே வராமல்‌ வீட்டுக்குள்ளேயே இருப்பது கொரோனாவைக்‌ கட்டுப்படுத்த சிறந்த வழியாகும்‌ என்றார். மேலும், அரசு மற்றும்‌ அதிகாரிகளுடன்‌ மக்கள்‌ முழு அளவில்‌ ஒத்துழைக்கவேண்டும்‌, சமூக விலகலைக்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌, அடிக்கடி கைகளை சோப்பினால்‌ கழுவி சுத்தம்‌ செய்யவேண்டும்‌ என்று கேட்டுக்கொண்ட அவர், மத்திய மற்றும்‌ மாநில அரசு வழிகாட்டுதல்களின்படி அவற்றைப்‌ பின்பற்றி நடந்துகொண்டால்‌ அனைவரும்‌ கொரோனாவை கட்டுப்படுத்தலாம்‌ என்று கூறினார்‌. 

மேலும்‌ விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்‌ : 0422 - 4324917, 43249168, 97696 97646.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...