டெல்லி: எதிர்பாராத கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க முயற்சி எடுத்து அதன் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் பிரதமர் மற்றும் பல்வேறு மாநில அரசுகளுக்கும் சிட்டி என்றழைக்கப்படும் இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் த.ராஜ்குமார் தனது நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வரும் ஏப்ரல் 14, 2020ம் தேதி வரை ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது ஒரு தைரியமான மற்றும் உறுதியான முடிவு என்றும், அதன் மூலம் நாட்டிலுள்ள 130 கோடி மக்களை காப்பாற்ற உதவும் என்றும், அந்த முயற்சியில் இந்திய ஜவுளித்துறையினர் உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருப்பார்கள் என்றார்.
இக்கட்டான இச்சூழலில் ஐவுளித்துறையினருடன் நின்று தனது ஆதரவை தெரிவித்துள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சா் ஸ்மிருதி சுபின் இராணி அவர்களுக்கு இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைவா் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ஜவுளிகளை வாங்கும் இறக்குமதியாளர்கள் மத்திய ஜவுளித்துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று வர்த்தகம் மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் ஏற்கனவே இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு அளித்த ஆர்டர்களை ரத்து செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதார ரீதியில் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய நிதித்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ள ரூ1.70 இலட்சம் கோடி மதிப்புள்ள நிதி உதவியை ராஜ்குமார் பெரிதும் வரவேற்றுள்ளார்.
மேலும், தற்போது ரிசாவ் வங்கி அறிவித்துள்ள நிவாரண அறிக்கையில் கடனையும், நடப்பு மூலதன வட்டியையும் செலுத்த மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ள போதிலும் வட்டிக்கு மூன்று மாத கால அவகாசம் கொடுக்க ரிசான் வங்கிக்கு பரிந்துரை செய்யுமாறு பாரத பிரதமர் அவர்களை சிட்டி தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிகமான நிதி மூலதனத்தையும், மின்சார உபயோகத்தையும், அதிக வேலையாட்களையும் கொண்டுள்ள ஜவுளித்துறையானது தற்போது அதிக சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நடப்பு காலாண்டு ஒரு சில தினங்களில் முடிவடைய உள்ள சூழ்நிலையில் வட்டி கால அவகாச நிவாரணம் உடனடியாக தேவை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், குறைந்தபட்சம் 25 சதவீத கூடுதல் நடப்பு மூலதனத்தை எந்தவித கூடுதல் பாதுகாப்போ அல்லது நிதிச்சுமையோ இன்றி இல்லாமல் வழங்கிட ரிசர்வ் வங்கியின் மூலம் அனைத்து வங்கிகளுக்கும் பரிந்துரை செய்திட வேண்டும் என்றும் சிட்டி தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அரசு நிலைமையை கூர்ந்து கவனித்து தேவையான முடிவுகளை மேற்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜவுளி ஆலைகள் மின் கட்டணம் செலுத்துவதற்கு மூன்று கால மாத அவகாசம் வழங்க வேண்டும் என்றும் டிமாண்ட் சார்ஜை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மின்துறை அமைச்சர்களை ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.