கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைப்பு - பொறுப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றி நடந்து கொண்ட மக்களுக்கு முதலமைச்சர் பாராட்டு!

கோவை: கோவை டவுன்ஹால் காய்கறி மார்க்கெட் மற்றும் உக்கடம் காய்கறி மார்க்கெட் ஆகியவை உக்கடம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி சந்தையாக மாற்றப்பட்டுள்ளது.

கோவை: கோவை டவுன்ஹால் காய்கறி மார்க்கெட் மற்றும் உக்கடம் காய்கறி மார்க்கெட் ஆகியவை உக்கடம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி சந்தையாக மாற்றப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையான பால், காய்கறி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டது.

கொரோனா தொற்று வீரியம் மிகவும் அதிகம் என்பதால் தமிழகத்தில் கடுமையாக ஊரடங்கை பின்பற்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், உழவர் சந்தைகள் காலை 4.30 மணி முதல் 9 மணி மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல, குறுகிய இடங்களில் சந்தைகள் அமைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. 

அதன் அடிப்படையில், டவுன்ஹால் காய்கறி மார்க்கெட் மற்றும் உக்கடம் காய்கறி மார்க்கெட் ஆகியவை உக்கடம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், பொதுமக்கள் நெருக்கத்தை தடுக்க 1 மீட்டர் இடைவெளியில் கட்டங்கள் போடப்பட்டுள்ளது. காலை முதல் உக்கடம் பேருந்து நிலையத்தில் காய்கறி வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.



இதே போல், அண்ணா மார்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி மார்கெட் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு பொதுமக்கள் அங்கிருந்து காய்கறிகள் பெற்றுச் செல்கின்றனர்.

கோவை காய்கறி சந்தைக்கு முதலமைச்சர் பாராட்டு:-







கோயம்புத்தூர் காய்கறி சந்தையில் பொறுமையுடனும், பொறுப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் நடந்து கொண்டது பாராட்டிற்குரியது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 



மேலும், இதற்கான பணிகளை மேற்கொண்ட காவல் துறையினருக்குத் தனது பாராட்டுகளை தெரிவித்தார். 



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...