கோவை இஎஸ்ஐ மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் கிருமி நாசினி அடித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - நா.கார்த்திக் எம்.எல்.ஏ

கோவை: வரதராஜபுரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை சுற்றியும் உள்ள பகுதிகளில் தினமும் கிருமி நாசினி அடித்து, இப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை: வரதராஜபுரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை சுற்றியும் உள்ள பகுதிகளில் தினமும் கிருமி நாசினி அடித்து, இப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு கோவையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கோவை வரதராஜபுரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு தனி மருத்துவமனையில் இடம் ஒதுக்கி சிகிச்சை அளிப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.

இந்நிலையில், இந்த மருத்துவமனைக்கு சுற்றிலும் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கும் இந்த கொரோனா தொற்று பரவி விடுமோ என்று அச்சம் கொண்டுள்ளனர். 

மேலும், இந்த மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில், தினமும் கிருமி நாசினி அடித்து பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்று சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்கள். இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய போதிய விழிப்புணர்வும், பாதுகாப்பும் தர வேண்டியது மாநகராட்சியின் கடமை.

ஆகவே, இந்த மருத்துவமனையை சுற்றியும் உள்ள பகுதிகளில் தினமும் கிருமி நாசினி அடித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு, இப்பகுதியில் உள்ள மக்களின் அச்சத்தைப் போக்கி, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...