ஊருக்குள் நுழைவதற்கு கைகளை சோப்பால் கழுவிய பின்பே அனுமதி..! ஊர் நுழைவு வாயிலில் நின்று கண்காணிக்கும் அன்னூர் இளைஞர்கள்!

கோவை: அன்னூர் அருகே கிராமத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊருக்குள் நுழையும் அனைவரும் கைகளை சோப்பால் கழுவிய பின்பே அனுமதிப்போம் என பேனர் வைத்து அதனை உள்ளூர் இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர்.

கோவை: அன்னூர் அருகே கிராமத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊருக்குள் நுழையும் அனைவரும் கைகளை சோப்பால் கழுவிய பின்பே அனுமதிப்போம் என பேனர் வைத்து அதனை உள்ளூர் இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையில் உள்ளது குன்னத்தூராம் பாளையம் கிராமம். இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

தற்போது கொரோனோ வைரஸ் நோய் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த நோய் பரவலை தடுப்பதற்காக இந்த கிராம மக்கள் தங்களை தனிமைப்படுத்தி சுயகட்டுப்பாட்டுடன் இருந்து வருகின்றனர். 



இதனையடுத்து, கிராமத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊருக்குள் நுழையும் அனைவரையும் சுய சுத்தத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஊருக்குள் நுழைய வேண்டுமா கையை சோப்பால் கழுவிய பின்பே அனுமதிப்போம் என பேனர் வைத்து அதனை கண்காணிக்கவும் செய்கின்றனர் உள்ளூர் இளைஞர்கள். 

இதற்காக ஊரின் இரண்டு நுழைவு வாசலிலும் டேபிள் வைத்து, அதில் தண்ணீர் தொட்டியும் அருகில் சோப்புக்களையும் வைத்துள்ளனர். தங்கள் ஊருக்குள் வருவோர் யாராக இருந்தாலும் கை, கால்களை முழுமையாக சோப்பால் கழுவிய பின்னரே வரும்படி அறிவுறுத்தி உள்ளனர். மேலும், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இப்பகுதி மக்களை வெளியே அனுப்புகின்றனர். 

அதேபோல, கொரோணா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேனர் வைத்துள்ளனர். சுயகட்டுபாட்டினை கடைபிடிக்கும் இந்த கிராமத்தினர் போல அனைவரும் சுய காட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...