கோவை: கோவை ராமநாதபுரம் காவல் நிலையம், போத்தனூர் காவல் நிலையம் உட்பட கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கடந்த 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவை மாநகரத்தில் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கோவை டி-1 ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட ஒலிம்பஸ், புலியகுளம், அம்மன்குளம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், போலீசார் ஊர் பகுதிக்குள் சென்று பொதுமக்கள் தனித்து வாழவும், கைகளைக் கழுவி தூய்மையாக இருந்து சமூக பரவலை கட்டுப்படுத்தவும் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொண்டனர்.
அதேபோல, போத்தனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட சுந்தராபுரம், வெள்ளலூர், குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம், போன்ற இடங்களிலும் போலீசார் விழிப்புணர்வு மற்றும் உணவு வழங்கல் பணிகளில் ஈடுபட்டனர்.