ரிசர்வ்‌ வங்கியின்‌ கொரோனா நிதி நிவாரண நடவடிக்கைகள் அறிவிப்பிற்கு சைமா வரவேற்பு

கோவை: ரிசர்வ்‌ வங்கியின்‌ கொரோனா நிதி நிவாரண நடவடிக்கைகளுக்கு அறிவிப்பிற்கு சைமா வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவை: ரிசர்வ்‌ வங்கியின்‌ கொரோனா நிதி நிவாரண நடவடிக்கைகளுக்கு அறிவிப்பிற்கு சைமா வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இந்திய ஜவுளித்‌ தொழில்‌ கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஏற்றுமதி வீழ்ச்சி, மலிவு விலையில்‌ ஜவுளிப்‌ பொருட்கள்‌ குவிப்பு மற்றும்‌ உள்நாட்டு சந்தையில்‌ சுணக்கம்‌ என எதிர்மறையான வளர்ச்சியை கண்டு சிரமத்தில்‌ இயங்கி வந்தது. இதன்‌ பொருட்டு பஞ்சாலைகள்‌ வாங்கிய கடனை திருப்பிச்‌ செலுத்த இரண்டாண்டு கால அவகாசம்‌ கேட்டு கோரி வந்தது.

இந்த கோரிக்கையை மத்திய ஜவுளித்துறை அமைச்சர்‌ அவர்களும்‌ ஏற்றுக்‌ கொண்டு அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார்‌. மேலும்‌, இதே கோரிக்கையை ஜவுளி தூதுக் குழு பாரத பிரதமர் அவர்களை கடந்த ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ 26ம்‌ சந்தித்த போதும்‌ மேற்படி கோரிக்கை வலியுறுத்தியது.

எதிர்பாராத கொரோனா வைரஸ்‌ நோய்‌ தாக்குதல்‌, குறிப்பாக 21 நாட்கள்‌ ஊரடங்கு உத்தரவு என்ற அறிவிப்பு அனைத்து தரப்பினருக்கும்‌ சிக்கலான நிதி சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான நிதி மூலதனத்தையும்‌, மின்சார உபயோகத்தையும்‌, அதிக வேலையாட்களையும்‌ கொண்டுள்ள ஜவுளித்துறையானது தற்போது அதிக சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

எனவே, அரசிடம்‌ கடன்‌ மற்றும்‌ வட்டி திருப்பி செலுத்த ஒரு வருட கால அவகாசம்‌, 25 சதவீத கூடுதல்‌ நடப்பு மூலதன நிதியை எவ்வித கூடுதல்‌ பாதுகாப்பு நிர்ப்பந்தம்‌ இன்றி வழங்க வேண்டும்‌ என்பதோடு, மின்சார கட்டணம்‌ செலுத்துவதற்கு மூன்று மாதகால அவகாசம்‌ கொடுக்க வேண்டும்‌ என்று கோரி வந்த நிலையில்‌, தற்போது ரிசான்‌ வங்கி அறிவித்துள்ள நிதி நிவாரண நடவடிக்கை ஜவுளித்துறைக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில்‌, பாரத பிரதமா்‌, மத்திய நிதித்துறை அமைச்சர்‌, ஜவுளித்துறை அமைச்சர்‌ ஆகியோருக்கு ரிசர்வ்‌ வங்கி மூலம்‌ கொடுத்த அறிவிப்புக்கு தென்னிந்திய பஞ்சாலைகள்‌ சங்கத்தின்‌ தலைவர்‌, அஷ்வின்‌ சந்திரன்‌ தனது நன்றியையும்‌ பாராட்டுதலையும்‌ தெரிவித்துக்‌ கொண்டுள்ளார்‌. 

கடன்‌ மற்றும்‌ வட்டியை திருப்பி செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம்‌ அளித்தமைக்கும்‌, நடப்பு மூலதன‌ கடன்‌ பெறும்‌ அளவை மீண்டும்‌ கணக்கீடு செய்து கூடுதல்‌ கடன்‌ கொடுக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டதற்கும்‌, ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததையும்‌ அவர்‌ வரவேற்றுள்ளார்‌. மேற்படி அரசின்‌ நடவடிக்கைகள்‌ தற்போதைய சூழ்நிலையில்‌ ஜவுளித்துறைக்கு பெரிதும்‌ பயனளிக்கும்‌ என்று அஷ்வின்‌ கூறியுள்ளார்‌.

தற்போது ரிசாவ்‌ வங்கி அறிவித்துள்ள நிவாரண அறிக்கையில்‌ கடனையும்‌, நடப்பு மூலதன வட்டியையும்‌ செலுத்த மூன்று மாதங்கள்‌ அவகாசம்‌ கொடுத்துள்ள போதிலும்‌ வட்டிக்கு மூன்று மாத கால அவகாசம்‌ கொடுக்க ரிசர்வ்‌ வங்கிக்கு பரிந்துரை செய்யுமாறு பாரத பிரதமர் அவர்களை அவர்களை சைமா தலைவர்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌. நடப்பு காலாண்டு ஒரு சில தினங்களில்‌ முடிவடைய உள்ள சூழ்நிலையில்‌ வட்டி கால அவகாச நிவாரணம்‌ உடனடியாக தேவை என்றும்‌ அவர்‌ கூறியுள்ளார்‌. 

கடன்‌ மற்றும்‌ வட்டி தொகைகளை திருப்பிச்‌ செலுத்த அரசு வழங்கிய கால அவகாசம்‌ ஜவுளித்துறையின்‌ தற்போதைய தேவை. ஏனெனில்‌, தற்போதைய நிலையில்‌ ஜவுளித்துறையினர்‌ கடன்‌ மற்றும்‌ வட்டியை திரும்ப செலுத்தும்‌ நிலையில்‌ இல்லை என்பதோடு, கைவசம்‌ இருக்கும்‌ பணத்தை கொண்டு தொழிலாளர்களுக்கும்‌ சம்பளம்‌ மற்றும்‌ இதர செலவுகளை சந்திக்கவே சரியாக இருக்கும்‌. 

மேலும், வரும்‌ நாட்களில்‌ ஏற்படக்கூடிய நிலைமையை கருத்தில்‌ கொண்டு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்‌ என்று அஷ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்‌. மேலும்‌, தென்னிந்திய மாநில‌ அரசுகள்‌ ஜவுளி ஆலைகள்‌ மின்‌ கட்டணம்‌ செலுத்துவதற்கு மூன்று கால மாத அவகாசம்‌ வழங்க வேண்டும்‌ என்றும்‌ டிமாண்ட்‌ சார்ஜை முற்றிலுமாக நீக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...