நீலகிரி: உதகை சாந்தி விஜா பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உழவர் சந்தையில் பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகளை வாங்கி சென்ற நிலையில், மண் தூசுகள் படிவதை தடுக்க தற்காலிக கூடாரங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என்று வியாபாரிகள் காேரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இதில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்க மற்றும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக வழக்கம்போல் இயங்கும் உழவர் சந்தைகளுக்கு பதிலாக மாற்று இடங்களான பேருந்து நிலையம் மற்றும் மைதானங்களில் அமைக்கப்பட்டு ஒரு மீட்டர் இடைவெளியில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, உதகை சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள உழவர் சந்தை விற்பனை நிலையமானது, மார்க்கெட் பகுதியில் உள்ள சாந்தி விஜயா பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காய்கறிகள் வாங்க வரும் மக்களுக்கு முன்னதாக கிருமிநாசினிகள் வழங்கப்பட்டன.
பின்னர் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசையாக நின்று காய்கறிகளை பெறும் வகையில் வட்டங்கள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மைதானத்தில் வைக்கப்படும் கடைகளில் மண் தூசிகள் அதிகம் படிவதால் பாெதுமக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதால் தற்காலிக கூடாரங்கள் அமைத்து விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.