கோவை: கோவையில் பெண் மருத்துவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் பணியாற்றிய போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் பெண் மருத்துவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் பணியாற்றிய போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த இரண்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்த ஈரோடு ரயில்வே பணியாளருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அப்பணியாளருக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளித்த 42 வயது பெண் மருத்துவருக்கும் கொரோனா அறிகுறி தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் ஈரோட்டில் இருந்து கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து அப்பெண் மருத்துவர் கொரோனா அறிகுறிகள் காரணமாக இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அம்மருத்துவர் பணியாற்றிய போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஈரோடு ரயில்வே மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அம்மருத்துவர் சிகிச்சை அளித்த நோயாளிகளின் விவரங்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு வருகிறது.