திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் சென்றதாக 40 வழக்குகள் பதியப்பட்டு செய்யப்பட்டுள்ளதாகவும், 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துணை ஆணையர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் மாநகர காவல்துறை சார்பில் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதன் ஒருபகுதியாக திருப்பூரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 வாகனங்களை மாநகர காவல்துறை ஆணையர் பத்ரிநாராயணன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சென்றதாக 40 வழக்குகள் பதியப்பட்டு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் திருப்பூர் ஊரகப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாநகர காவல் துறை சார்பில் 30 வாகனங்களின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த வாகனங்கள் பகுதி வாரியாக சென்று பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.