கோவை மனித உரிமைகள் அமைப்பு புகார்: வெளியே வரும் மக்களை போலீசார் அடிப்பதை கண்டித்து, தேசிய மனித ஆணையத்திடம் புகார்

கோவை: அடிப்படை தேவைகளுக்காக வெளிவே வரும் மக்களை அடிப்பதை நிறுத்துங்கள், என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோயம்புத்தூர் மனித உரிமைகள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

கோவை: அடிப்படை தேவைகளுக்காக வெளிவே வரும் மக்களை அடிப்பதை நிறுத்துங்கள், என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோயம்புத்தூர் மனித உரிமைகள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வீட்டினை விட்டு வெளியேற கூடிய நிலை நிலவுகிறது. ஆனால் அவ்வாறு வரக்கூடிய மக்களை எந்தவொரு கேள்வியும் கேட்காமல் தடியால் காவல்துறையினர் தாக்குகின்றனர், இது கண்டனத்திற்கு உரியது எனவும், இதனை காவல்துறையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு, கோவை மனித உரிமை அமைப்பினை சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். 

மேலும் 144 தடை உத்தரவினை மீறியதாக அதிகார்கள் கண்மூடித்தனமாக தாக்குவது மனித உரிமை மீறல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல் இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான மனித உரிமைகளை மீறுவதாகும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவின்படி 4 நபர்களுக்கு மேல் செல்பவர்களே தண்டனைக்குரியவர்களாய் கருதப்படுவார்கள், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறிது காலம் காவலில் வைக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படுவார். விசாரணைக்கு பின்னர், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...