தமிழகத்தில் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் வீட்டில் டெலிவரி செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் வீட்டில் டெலிவரி செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது:-
Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும், தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கான தடை தொடரும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 வரை தொடரும் எனவும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மின் வணிக நிறுவனங்களான (e -commerce) Grofers, Amazon, Big Basket, Flipkart, Dunzo போன்ற நிறுவனங்கள் மளிகை பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.