தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 29 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கொரோனாவால் இறந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்புடைய 2 பேருக்கு கெரோனா உள்ளது. இதேபோல் சென்னையைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று வரை எத்தனை பேருக்கு, கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஸ்க்ரீன் செய்யப்பட்ட பயணிகள்- 2,09,284, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் படுக்கைகள்- 13,727, வென்டிலேட்டர்கள்: 2,464, தற்போதைய சேர்க்கை- 284, சோதிக்கப்பட்ட மாதிரிகள் - 1039 (எதிர்மறை -933, நேர்மறை- 26 (1 டிஸ்சார்ஜ்), பரிசோதனையின்கீழ்- 80) உள்ளன. இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.