கோவை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் தடையினை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றியதாக கோவை நகர் மற்றும புறநகர் பகுதிகளில் மொத்தம் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் உத்தரவை மீறி பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது, தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்வது போன்றவற்றில் ஈடுபட்டுவருகின்றனர்.
மற்றவர்களுக்கு தேவையின்றி நோயினை பரப்பும் வகையிலும் 144 தடை உத்தரவினை மீறியதாக கோவை மாநகரில் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல, கோவை புறநகர் மாவட்டத்தில் 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.